முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

8 இடங்களில் பேருந்து மறியல், 2 இடங்களில் ரயில் மறியல்: திமுக அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் முழு

Updated On :5 ஏப்ரல் 2018, 7:14 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு, நாமக்கல் கிழககு மாவட்டத்தில் 8 இடங்களில் பேருந்து  மறியல் மற்றும் 2 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அனைத்துக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமையில் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தை முழுமையாக நடத்துவது.  நாமக்கல், புதன்சந்தை, புதுச்சத்திரம், ராசிபுரம், வெண்ணந்தூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, எருமப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட 8 இடங்களில் பேருந்து மறியல் போராட்டமும், ராசிபுரம் மற்றும் மோகனூர் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்பது. 
கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் உடையவர், பொருளாளர் செல்வம், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசுவாமி, பொன்னுசாமி, நகரச் செயலர்கள் மணிமாறன், மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஷேக்நவீத் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.