உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

காஷ்மீரில் சிறுமி பலாத்கார கொலை: மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் 

காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்தக் கொடூர செயலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:42 am IST

காஷ்மீரில் சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இந்தக் கொடூர செயலில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் ஜெகன்நாதன் முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எம். ஷேக் நவீத் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தார்.
 ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.ஏ. சித்திக், முன்னாள் மாவட்ட தலைவர்வர்கள் பாச்சல் சீனிவாசன், டாக்டர் ரா. செழியன், மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தி, மகளிர் காங்கிரஸ் செயலர் மகேஸ்வரி, துணைத் தலைவர் புஷ்பவள்ளி, கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்கம், நகர காங்கிரஸ் தலைவர்கள் மோகன், முரளி, நாமக்கல் நகரச் செயலாளர் தாமு, ஜெயலட்சுமி, டாக்டர் பாலாஜி, ரத்தினம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள்பங்கேற்றனர்.
 வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் கமலா நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.