ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
/

தீவிர மாணவர் சேர்க்கை முகாம் ஊர்வலம் 

திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சார்பில் திங்கள்கிழமை தீவிர மாணவர் சேர்க்கைக்கான ஊர்வலம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:40 am IST

திருச்செங்கோடு சட்டையம்புதூர் நகராட்சி தொடக்கப் பள்ளியின் சார்பில் திங்கள்கிழமை தீவிர மாணவர் சேர்க்கைக்கான ஊர்வலம் மற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
 நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாகிதாபானு தலைமை வகித்தார். ஆசிரியர்கள் கலா, சடையப்பன் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தின்போது 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் பற்றிய விவரங்கள்சேகரிக்கப்பட்டன.
 பள்ளியின் கற்பித்தல் முறை, மாணவர்களுக்கு அரசு தரும் உதவிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்க கேட்டுக் கொண்டனர். வரும் வாரங்களில் பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தி அரசுப் பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க தீவிர மாணவர் சேர்க்கைமுகாமைத் துவக்கினர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.