வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கடந்த நிதியாண்டில் 17, 000 விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் 17,033 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தியுள்ளனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:50 am

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில் 17,033 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 2017-18 ஆம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் வங்கி கடன்பெற்ற விவசாயிகள் 73 பேர்,  கடன் பெறா விவசாயிகள் 15,140 பேர் காப்பீடு செய்துள்ளனர். பயிர் காப்பீடு செய்யப்பட்ட பரப்பளவு 29,014 ஏக்கர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பிரீமியத் தொகை ரூ. 88 லட்சத்து 81 ஆயிரத்து 151. 
2017-18 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் நெல் சம்பா பயிருக்கு 1,368 விவசாயிகள் 1481.921 ஏக்கருக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். பிரீமியத் தொகை ரூ. 5,85,358 வசூல் செய்யப்பட்டுள்ளது. 2017-18 ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு  452 கடன் பெற்ற விவசாயிகள் 720 ஏக்கரில் பயிர் காப்பீடு செய்து ரூ. 9.72 லட்சம் பிரீமியத் தொகை பெறப்பட்டுள்ளது.
கடந்த 2016-17 ரபி பருவத்தில் 21,516 விவசாயிகள், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்திருந்தனர். இதில், நெல் பயிருக்கு விதைப்பு செய்ய இயலாமை இனத்தில் பிரீமியம் செலுத்திய 335 விவசாயிகள்,  நெல் விதைப்பு செய்து மகசூல் இழப்பீட்டை சந்தித்த 805 விவசாயிகள் என மொத்தம் 1,140 விவசாயிகளுக்கு ரூ. 1,09,43,917 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல் தவிர, இதர பயிர்களுக்குப் பதிவு செய்துள்ள 732 விவசாயிகளுக்கு ரூ. 1,05,31,000 இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  எஞ்சியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.