காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

திருச்செங்கோட்டில் லாரி உரிமையாளர்கள் சங்கப் பேரவைக் கூட்டம்

திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் 56-ஆவது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :

திருச்செங்கோடு லாரி உரிமையாளர் சங்கத்தின் 56-ஆவது பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைவர் பாரி கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரவி வரவேற்றார். பொருளாளர் முத்துசாமி ஆண்டறிக்கை வாசித்தார். இணைச் செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார். லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து தமிழ்நாடு சம்மேளனத் தலைவர் குமாரசாமி விளக்கினார்.
கே.எஸ்.ஆர். கல்லூரிகளின் தாளாளர் ரங்கசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் குருசாமி, டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாச்சிமுத்து, மது ரகுநாத், சங்ககிரி லாரி சங்கத் தலைவர் செல்வராஜ்,  தென்மண்டலத் தலைவர் அனிதா வேலு, சோமசுந்தரம், வக்கீல் பரணீதரன்  உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசி ஆலோசனை வழங்கினர்.
அதிக அளவில் டீசல், ஆயில் கொள்முதல் செய்த உறுப்பினர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. 
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
டீசல்,  பெட்ரோல் விலை நிர்ணயத்தை ஆயில் நிறுவனங்கள் முடிவு செய்யாமல் அரசே இந்த அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். திருச்செங்கோடு நகரில் ஆட்டோ நகர் அமைக்க வேண்டும். திருச்செங்கோட்டில்  இருந்து வெளியூர் செல்லும் நகராட்சி சாலைகளை  நான்கு வழிச் சாலைகளாக மாற்ற வேண்டும். சுங்கச்சாவடியில் ஒவ்வொரு முறையும் சுங்கவரி செலுத்துவதைத் தவிர்த்து தேசிய பர்மிட் உள்ளதைப்போல ஆண்டுக்கு ஒரு முறை சுங்கவரி செலுத்தும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்த வேண்டும். இதன்படி ஆண்டு முழுக்க லாரிகள் சுங்கச்சாவடிகள் வழியே கட்டணமின்றி செல்ல முடியும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்.
அதிக போக்குவரத்துள்ள திருச்செங்கோடு- ஈரோடு சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு நகரைச் சுற்றி ரிங் ரோடு அமைக்க வேண்டும். லாரிகளில் ஏற்றுக்கூலி, இறக்குக்கூலியை சரக்கு அனுப்புவோரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
லாரி உரிமையாளர்களைக் கசக்கிப் பிழியும் தாங்கமுடியாத  மூன்றாம் நபர் காப்பீட்டை ஐ.ஆர்.டி.ஏ. வசமிருந்து மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழக அரசு டீசல் மீதான வாட்வரியைக் குறைக்க வேண்டும்.
லாரி சங்கத்தில் உள்ள தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் பதவிகளை ஒருவர் மூன்று முறை மட்டுமே வகிக்க தீர்மானிக்கப்படுகிறது. மேலும் பல தீர்மானங்கள் நிறைவேறின. ரிக் சங்கத் தலைவர் கந்தசாமி, பொருளாளர் சுந்தரராஜன், முன்னாள் தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.