உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 
நாமக்கல் அருகே முதலைப்பட்டியைச்  சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் பரத்(20). இவர் நாமக்கல்லில் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். புதன்கிழமை விடுமுறை தினம் என்பதால்,  நண்பர்களுடன் சேர்ந்து நல்லிப்பாளையம் மயானம் அருகே உள்ள கிணற்றுக்கு குளிக்கச்சென்றார். கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக்கொண்டிருந்த பரத்,  திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.  நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கினார்,  நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். 
தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று கிணற்றுக்குள் இருந்து பரத் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  சம்பவம் குறித்து நல்லிப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.