ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

உழவர் விவாதக் குழு அமைப்பாளர்களுக்குப் பயிற்சி

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், நாமக்கல் உழவர் பயிற்சி நிலையம் இணைந்து உழவர்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:53 am

DIN

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம், நாமக்கல் உழவர் பயிற்சி நிலையம் இணைந்து உழவர் விவாதக்குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சி முகாமை அண்மையில் வெண்ணந்தூரில் நடத்தியது.
வெண்ணந்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் கு. சுந்தரவடிவேல் இதில் தலைமை வகித்தார்.
நாமக்கல் வேளாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை ஹேமலதா, பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்வதன் நோக்கம், அதன் பயன் குறித்து பயிற்சி வழங்கினார். வேளாண்மை அலுவலர் மா. செளந்தரராஜன் சோலார் விளக்குப் பொறி, நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் குறித்து எடுத்துக் கூறினார்.
தோட்டக்கலைத்துறையின்  உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வசந்த், கோபால் ஆகியோர் மாடி தோட்டம் அமைத்தல் குறித்துப் பேசினர்.  உதவி விதை சான்றிதழ் அலுவலர் ரத்தினவேல், விதைக் கிராமத் திட்டம் குறித்து அமைப்பாளர்களுக்கு எடுத்துக் கூறினார். பட்டு வளர்ச்சித் துறையின் உதவி ஆய்வாளர் கண்ணன் வெண்பட்டு வளர்ப்புக் குறித்துப் பேசினார்.
வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் சங்கர்  வேளாண் இயந்திரங்களுக்கு வழங்கப்படும் மானியம்  குறித்து பேசினார் துணை வேளாண்மை அலுவலர் பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆரோக்கியசாமி, கருப்புசாமி, அந்தோணிசாமி, திருநாவுக்கரசு ஆகியோர் விதை நேர்த்தியின் செயல் விளக்கத்தினை செய்து காண்பித்தனர். அட்மா திட்ட அலுவலர்கள் ரமேஸ், கவிசங்கர் அட்மா திட்டப் பணிகள் குறித்த விவரங்களை கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.