ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, தேர்வுக்கு படிக்க வழிகாட்டும் கருத்தரங்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 62,907 உதவி லோகோ பைலட் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களில், தென்னக ரயில்வேயில் 4,193 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை, படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள் மற்றும் தேர்வினை எதிர்கொள்ளும் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வரும் 28-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள மனுதாரர்கள் (குறிப்பாக ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தோர்) நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.