தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கைலாசநாதர் கோயில் பாதையில் சாலைத் தடுப்புகள்

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதசாரிகள், ஓங்காளியம்மன் கோயிலிலிருந்து அண்ணா சிலை வரை வைத்துள்ள

News image
Updated On :9 ஜூலை 2018, 3:10 am

DIN

திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதசாரிகள், ஓங்காளியம்மன் கோயிலிலிருந்து அண்ணா சிலை வரை வைத்துள்ள சாலை தடுப்புகளைச் சுற்றிக் கோயிலுக்குச் செல்ல வேண்டி உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஈரோடு சாலை, ஆனங்கூர் சாலை வழியாக வரும் பொதுமக்கள் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அந்த வீதி வழியாக நேராக உள்ள பிரதான சாலையை கடந்து கைலாசநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தனர். தற்போது  ஆஞ்சநேயர் கோயில் வீதிக்கும்,கைலாசநாதர் கோயிலுக்கும் செல்லும் தெற்கு மாட வீதிக்கும் இடையில் உள்ள பிரதான சாலையில் சாலை தடுப்புகள் போக்குவரத்து காவல்துறையினரால் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் தாங்கள் அழைத்து வரும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சாலையைச் சுற்றி அண்ணா சிலை பகுதியைத் தாண்டி செல்ல வேண்டி இருப்பது சிரமமாக உள்ளது. ஆகவே, பாதசாரிகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.