ராசிபுரம் அருகே நீரில் குளிக்கச் சென்ற மாணவர் இருவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மல்லூர் அருகே அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பி. தனராஜ் (30), நாச்சிமுத்து மகன் சரவணன் (18), அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், ஹரிஹரன், அஜித்குமார், பிரகாஷ், காளியண்ணன், திவான்குமார் ஆகிய நண்பர்கள் 7 பேர் குளிப்பதற்காக ராசிபுரம் அருகே தேங்கல்பாளையம் ஆணைகட்டியான் காலனி பகுதியில் உள்ள குட்டைக்குச் சென்றனர்.
புறம்போக்கு நிலமான அப்பகுதி 5 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரியாக இருந்து வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கல்குவாரி உரிமம் பெற்று பாறைகளை வெட்டி எடுத்து ஜல்லி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
தற்போது அது 50 ஆழம் கொண்ட குட்டையாக மாறி மழைநீர்த் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், அங்கு குளிக்க வந்த 7 பேரில் நீச்சல் தெரியாத சரவணன் (18) குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி கூச்சலிட்டுள்ளார்.
இதை பார்த்த உடன் வந்த தன்ராஜ் (30) என்பவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில் அவரும் நீரில் மூழ்கினார். நீண்டநேரமாகியும் இருவரும் மேலே வரவில்லை. இதில் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். இதைப் பார்த்த உடன் வந்தவர்கள் செய்வதறியாது, கூச்சலிட்டுள்ளனர்.
தகவல் அறிந்து நிகழ்விடம் வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் குட்டையில் இருவரது சடலத்தையும் தேடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு சரவணன் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் தன்ராஜ் என்பவர் சடலத்தையும் மீட்டனர். இதில் உயிரிழந்த சரவணன், மல்லூர் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

