எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

சந்தன மரம் வெட்டியதாக 4 பேர் கைது: ரூ.1 லட்சம் அபராதம்

ராசிபுரம் அடுத்துள்ள குட்லாடம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரங்கள் வெட்டியதாக நான்கு பேரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:38 am IST

ராசிபுரம் அடுத்துள்ள குட்லாடம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரங்கள் வெட்டியதாக நான்கு பேரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
குட்டலாடம்பட்டி வனப் பகுதியில் சிலர் சந்தன மரங்கள் வெட்டுவதாக ராசிபுரம் வனச் சரக அலுவலகத்திற்க்கு வந்த தகவலை அடுத்து,  வனச் சரக அலுவலர் பெருமாள் தலைமையில் 15 பேர் கொண்டகுழு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.  அப்போது 4 பேர் சந்தன மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது வனத் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.  பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில்,  காமராஜ் (26) , ரமேஷ் (28) , சந்திரன் (25) , செல்வம் (30) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் கருமந்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து சந்தன வேர்கள்,  அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.  மேலும் நாமக்கல்  மாவட்ட வனச் சரக அலுவலர் காஞ்சனா உத்தரவின்பேரில் 4 பேருக்கு  தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.