ராசிபுரம் அடுத்துள்ள குட்லாடம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரங்கள் வெட்டியதாக நான்கு பேரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
குட்டலாடம்பட்டி வனப் பகுதியில் சிலர் சந்தன மரங்கள் வெட்டுவதாக ராசிபுரம் வனச் சரக அலுவலகத்திற்க்கு வந்த தகவலை அடுத்து, வனச் சரக அலுவலர் பெருமாள் தலைமையில் 15 பேர் கொண்டகுழு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 4 பேர் சந்தன மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது வனத் துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், காமராஜ் (26) , ரமேஷ் (28) , சந்திரன் (25) , செல்வம் (30) ஆகிய 4 பேர் என்பதும், இவர்கள் கருமந்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து சந்தன வேர்கள், அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும் நாமக்கல் மாவட்ட வனச் சரக அலுவலர் காஞ்சனா உத்தரவின்பேரில் 4 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!

மூன்று முடிச்சு தொடரில் இணைந்த நடிகை சஹானா!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் கைது!

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


