திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய பக்தர்கள்

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன்  கோயில் மகா குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. ப
Updated on
1 min read

திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன்  கோயில் மகா குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா  கடந்த 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர். 26-ஆம் தேதி பூச்சொரிதல்  நடத்தப்பட்டது.  27 -ஆம் தேதி இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் குண்டத்துக்கு பூஜை நடத்தப்பட்டு இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மகா குண்டம் திருவிழா நடைபெற்றது. மாலை அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முதல் காலை 10 மணிவரை  குண்டம் இறங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com