கொலை வழக்கில் தேடப்பட்டவர் பரமத்தி நீதிமன்றத்தில் சரண்
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாயனூர் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் பிணையில் வந்த கொலையாளியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் பரமத்தி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.


கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாயனூர் பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் பிணையில் வந்த கொலையாளியைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் பரமத்தி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.
கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த கோவக்குளத்தை சேர்ந்தவர் அமல்ராஜ் (40). லாரி ஓட்டுநரான இவர், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் கிருஷ்ணன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, பிணையில் வந்துள்ளார். கடந்த 26-ஆம் தேதி அதிகாலை சேங்கல் சாலையில் உள்ள முனையனூர் பூஞ்சோலைபுதூர் அருகே ஒரு காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் அமல்ராஜ் கிடந்துள்ளார். அவரது சடலத்தின் அருகே மதுப்புட்டிகள், தில்லி பதிவெண் கொண்ட அவரது இரு சக்கர வாகனமும் கிடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாயனூர் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி அமல்ராஜை கொலை செய்த மர்ம நபரைத் தேடி வந்தனர். கொலை செய்யப்பட்ட அமல்ராஜ் மீது 2014, 2017-ஆம் ஆண்டுகளில் முசிறி மற்றும் மாயனூர் காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமல்ராஜை கொலை செய்ததாக அவரது நண்பரான கோவைக்குளத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் குருசாமி (40) என்பவர் புதன்கிழமை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவரை நீதிபதி தனபால் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...