நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் வடக்குத் தெருவில் உள்ள மகாமாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதனையொட்டி திங்கள்கிழமை காலை முதல் காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, வரும் 18 -ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், 20ஆம் தேதி மறுகாப்பு கட்டுதலும் நடைபெறவுள்ளன. 21-ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிம்மம், ரிஷபம், அன்னப்பட்சி, பூதகி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெறவுள்ளது.
இதையடுத்து 27ஆம் தேதி மாலையில் வடிசோறு மற்றும் சப்பர வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 28ஆம் தேதி காலை அம்மன் ரதம் ஏறும் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் புறப்பாடும், 29-ஆம் தேதி தீ மிதித்தல் மற்றும் பெண்கள் பூவாரி போடும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 30-ஆம் தேதி காலை அலகு குத்துதல்,அக்னி சட்டி எடுத்தல், மற்றும் மாலையில் பொங்கல் மாவிளக்கு பூஜையும், வாண வேடிக்கையும் நடைபெறவுள்ளன. 31-ஆம் தேதி கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல் மற்றும் கிடா வெட்டுதல் நடைபெறுகிறது. ஜூன் 1-ஆம் தேதி காலை மஞ்சள் நீராடல், மாலை முத்துப் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும், 2ஆம் தேதி கோயிலுக்குள் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

சென்னையில் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

