தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில் நாமக்கல் நகரில் ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களின் இறுதிகட்ட வியாபாரம் ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரமாக நடைபெற்றது. இதனால் மக்கள் கூட்டத்தால் நாமக்கல் நகரம் போக்குவரத்து நெரிசலில் திணறியது.
நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நகைகள், ஜவுளி மற்றும் பட்டாசு வாங்க நாமக்கல்லுக்கு வந்ததால் கடைவீதி, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். மேலும் குற்றச் செயல்களை தடுக்க போலீஸார் தற்காலிக கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், நாமக்கல்லில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குப் புறப்பட்டதால் பேருந்துகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யா - 50! இயக்குநர் நெல்சனுடன் பேச்சுவார்த்தை?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

திருஞானசம்பந்தர் முத்துப் பந்தல் விழா!

நீட் மறுதேர்வு! நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதில் சிக்கலா? மாற்று வழிகள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


