தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

"கல்வி மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்'

கல்வி என்பது சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது,  மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என மருத்துவர் சமீர் ஹரியானி பேசினார்.

Updated On :8 அக்டோபர் 2018, 9:17 am IST

கல்வி என்பது சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது,  மற்றவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என மருத்துவர் சமீர் ஹரியானி பேசினார்.
குமாரபாளையம் எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கத் துவக்க விழா எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர்  முனைவர் ஏ.கே.நடேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் நிர்மல் பிரகாஷ், ரோட்டரி மாவட்ட ஆளுநர் வேட்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் பேசினர். 
பெங்களூரைச் சேர்ந்த ரோட்டரி மாவட்ட ஆளுநர்தேர்வு மருத்துவர் சமீர் ஹரியானி பேசியது:
ஒவ்வொரு மனிதனும் தனது ஏழ்மையை மாற்ற நினைத்து வாழ்வில் வெறியுடன் உழைத்து வெற்றி பெறுகிறான். அந்தவெறி வாழ்க்கையில் இறக்கும் தருவாயிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறார். வாழ்க்கையில் படிப்பு என்பது சம்பாதிப்பதற்காக அல்ல. படிப்பு மூலம் எப்படி மற்றவர்களுக்கு உதவமுடியும், எத்தனை பேருக்கு நன்மை அளிக்க முடியும் என்பதில்தான் படிப்பின் சிறப்பு உள்ளது என்றார்.  
விழாவில் ரோட்ராக்ட் தலைவர் கதிரேசன், தென் ஆசிய ரோட்ராக்ட் இயக்குநர் மணிகண்டன், எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்க ஆலோசகர் ஜி.சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை எக்ஸல் கல்வி நிறுவனங்களின் ரோட்டராக்ட் சங்கம் மற்றும் குமாரபாளையம் ரோட்டரி சங்கம் செய்திருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.