தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி மனு

நல்லிபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி,

Updated On :23 ஜனவரி 2019, 8:53 am IST

நல்லிபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி, ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் மனு அளித்தனர்.
அதில், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், நல்லிபாளையம் கிராமம், அருந்ததியர்தெருவில் விவசாயக் கூலி வேலை மற்றும் திருச்செங்கோடு லாரி பட்டறை, சைசிங் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் பற்றாக்குறையால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமமடைந்து நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.
வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல், குடிநீருக்காக தினசரி 3 மணி முதல் 5 மணி வரை நேரம் செலவிடுகின்றனர். எனவே, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, கோரிக்கை மனுவை எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணனிடம் அளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.