நாமக்கலில் மாவட்ட பதிவாளர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் புதன்கிழமை பரபரப்பான சூழல் காணப்பட்டது.
நாமக்கல்லை அடுத்த நல்லிப்பாளையம் காவல் நிலையம் அருகே ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள அசல் பத்திரப் பதிவு பிரிவில் பத்திர பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெய்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அசல் பத்திரப் பதிவு இணை சார்- பதிவாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் நல்லம்மாள் உள்பட 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் ரூ.17 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து, சார்- பதிவாளர் (பொறுப்பு) சுகம் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், ஆவணங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் புதன்கிழமை பிற்பகலுக்கு மேல் பத்திரங்களைப் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டதோடு, அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழலும் காணப்பட்டது. இச் சோதனை புதன்கிழமை இரவு வரையில் நீடித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுக் கடைகள் மூடல் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்: கமல்ஹாசன்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
