ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ரூ.12 லட்சம் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் சக்திநகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் செலுத்திய கட்டணம் ரூ.12 லட்சம் பள்ளியின் அறையில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனை பள்ளி கணக்காளர் வழக்கம் போல் வைத்து பூட்டியுள்ளார். இந்நிலையில், புதன்கிழமை பள்ளி ஊழியர்கள் வந்து பார்த்தபோது, பணம் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த பீரோ திறந்திருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் சுமார் ரூ. 12 லட்சத்தை காணவில்லை.
பள்ளியைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா திசை திருப்பப்பட்டு பணம் திருட்டு நடைபெற்றுள்ளது. சம்பவ இடத்துக்கு ராசிபுரம் காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) விஜயகுமார், உதவி ஆய்வாளர் பூபதி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த குற்றச் செயலில் பள்ளியில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது ஈடுபட்டுள்ளார்களா அல்லது வெளியாள்களா என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


