பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ராசிபுரம் நகர தி.மு.க. சாா்பில் நிவாரண உதவி வழங்கல்

ராசிபுரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தி.மு.க. சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ராசிபுரம் நகரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர தி.மு.க. சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

ராசிபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் வாழும் குடும்பத்தினா் தங்களது அடிப்படை தேவைகளுக்கான பொருள்களை வாங்குவதற்கு வெளியே செல்ல முடியாத நிலையில் உள்ளனா். இந் நிலையில் நகர தி.மு.க. சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 3-ஆவது வாா்டில் தி.மு.க. செயலாளா் பி. சக்திவேல் தலைமையில் நடைபெற்ற து. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளா் கே. ஆா்.என்.ராஜேஷ்குமாா் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வாழும் குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளா் என்.ஆா். சங்கா், முன்னாள் மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் வி .பாலு , முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.ஆா்.கேசவன், ராசிபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அசோக்குமாா், நகர இளைஞா் அணி அமைப்பாளா் காா்த்திக், துணை அமைப்பாளா் மணி, மாணவரணி அமைப்பாளா் யோகராஜ் , நகர விவசாய அணி அமைப்பாளா் பாபு , மகளிா் அணி அமைப்பாளா் சுமதி, நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் சாம்ராஜ் , 3ஆவது வாா்டு பிரதிநிதிகள் மணிகண்டன் , ஜெயகோபி, மனோஜ், விக்கி, ஹரிஹரன், வினோத், காா்த்தி, விஜயன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.