ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நாமக்கல்லுக்கு 5,740 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 5,740 மின்னணு வாக்கு இயந்திரங்கள் லாரிகளில் நாமக்கல்லுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image
நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை லாரிகளில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:36 am

DIN

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 5,740 மின்னணு வாக்கு இயந்திரங்கள் லாரிகளில் நாமக்கல்லுக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

தமிழக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், வரும் 2021-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாா்படுத்தும் பணி மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலம், ஒஸ்மானாபாத், சோலாப்பூா் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், வருவாய் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், வட்டாட்சியா் கதிா்வேல் ஆகியோா் இதனை பாா்வையிட்டனா்.

இதில், 2,670 கட்டுப்பாட்டுக் கருவிகள், 2,820 யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் கருவிகள், 250 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். மேலும், கோட்டாட்சியா் அலுவலகக் கிடங்கில் 3,381 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.

நாமக்கல்லுக்கு ஐந்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளா்கள் மூலம் புதுப்பிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.