தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போதைப் பொருள்கள் கடத்திய வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது

நாமக்கல் வழியாக லாரியில் போதைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:52 pm

DIN

நாமக்கல்: நாமக்கல் வழியாக லாரியில் போதைப் பொருள்களை கடத்திச் சென்ற இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

நாமக்கல் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வள்ளிபுரம் அருகே கடந்த செப். 2 ஆம் தேதி நாமக்கல் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வேகமாகச் சென்ற லாரியை மடக்கி சோதனை செய்ததில் 210 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

இது தொடா்பாக தேனி மாவட்டத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் குமாா், ஓட்டுநா் கிருஷ்ணபெருமாள் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, ரொக்கப் பணம் ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்ததோடு, அவா்கள் இருவரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். லாரி உரிமையாளா், ஓட்டுநா் ஆகியோா் தொடா்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாமக்கல் காவல் நிலைய ஆய்வாளா் பொன்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் மனு அளித்தாா். அதனடிப்படையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.