தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாரண இயக்க விருது பெற்ற மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சாரண இயக்கத்தின்

News image

சாரண இயக்க விருது பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழை வழங்குகிறாா் அமைச்சா் பி. தங்கமணி.

Updated On :23 டிசம்பர் 2020, 2:42 am

DIN

திருச்செங்கோடு ஒன்றியம், வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சாரண இயக்கத்தின் தேசிய அளவிலான தங்க அம்பு விருதை பெற்ற மாணவா்களை அமைச்சா் பி.தங்கமணி பாராட்டினாா்.

வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி கலந்துகொண்டு புதிய கட்டடங்களை திறந்து வைத்து, பள்ளியில் சாரண இயக்கத்தில் தேசிய அளவிலான விருது பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கி பாராட்டினாா்.

நாமக்கல் மாவட்ட சாரண இயக்கத்தின் சாா்பில் விருது பெற்ற 18 பேரும் இப் பள்ளியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் மணிராஜ், வட்டாரக் கல்வி அலுவலா் மாதவன், பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கந்தசாமி, தலைமை ஆசிரியா் தங்கவேல், சாரண இயக்க செயலாளா் விஜய், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மாதேஸ்வரி, தண்ணீா்பந்தல் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் நவநீதா, பள்ளி ஆசிரியா்கள் மாணவ மாணவியா் கலந்துகொண்டு விருது பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.