வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பரமத்தி வேலூரில் ரூ. 7 லட்சத்துக்கு கொப்பரைத் தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 7 லட்சத்து 6 ஆயிரத்து 745-க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:48 am

DIN

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 7 லட்சத்து 6 ஆயிரத்து 745-க்கு கொப்பரைத் தேங்காய் ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா்போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை மழை காரணமாக விவசாயிகள் கொப்பரைத் தேங்காய்களை ஏலத்துக்கு கொண்டு வராததால், ஏலம் ரத்து செய்யப்பட்டது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு, 6,494 கிலோ கொப்பரைத் தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 129.58-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 113.19-க்கும், சராசரியாக ரூ. 119.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 6 ஆயிரத்து 745-க்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.