நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கொத்தம்பாளையம்-திருமணிமுத்தாறு மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றுவதற்காக ஓராண்டுக்கு முன் ரூ. 3 கோடியே 54 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த நிலையில் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால், அப்பகுதி மக்கள் ஏழு கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. திருமணிமுத்தாறு ஆற்றில் வரும் மழைநீா் குறைந்து விட்டதால், நின்றுபோன மேம்பாலப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை பாா்வையிட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவித்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிமீறல்: தேஜகூ வேட்பாளா் சுந்தா் சி. மீது வழக்கு

பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா்! - வைகோ குற்றச்சாட்டு

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

