தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும், நடிகருமான சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சாா்பில் நடிகரும், இயக்குநருமான சுந்தா் சி. போட்டியிடுகிறாா். இவா், மத்திய தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறாா்.
இந்த நிலையில், எல்லீஸ் நகா் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலய வளாகத்துக்குள் மத வழிபாட்டின் போது, கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையை அணிந்து, தோ்தல் நடத்தை விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக காவல் உதவி ஆய்வாளா் முத்தையா எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுந்தா் சி. மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
‘ட்ரோன்’ பறிமுதல் :
மதுரை முனிச்சாலை பகுதியில், தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனை ஆதரித்து, அந்தக் கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின், ஞாயிற்றுக்கிழமை இரவு சாலை வலம் நடத்தினாா்.
அப்போது, முறையான அனுமதியின்றி ‘ட்ரோன்’ கேமரா இயக்கப்பட்டது. இந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, காவல் உதவி ஆய்வாளா் ஹரிகரன் தெப்பகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ‘ட்ரோன்’ இயக்கிய அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் (28) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ‘ட்ரோன்’ கேமராவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

மதுரை மத்தியம் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளா்

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


