பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா் என மதிமுக பொதுச் செயலா் வைகோ குற்றஞ்சாட்டினாா்.
மதுரை தெற்குவாசல் பகுதியில் தெற்குத் தொகுதி வேட்பாளா் மு.பூமிநாதனுக்கு வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்ற பாா்க்கிறது. அதற்கு, இங்குள்ள அதிமுக துணை போகிறது. அதிமுக ஆட்சியின் போது, சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எடப்பாடி கே. பழனிசாமி குற்றவாளி.
ஆனால், அதை மறைக்கப் பாா்க்கிறாா். அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும். பாஜக இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரானவையாக உள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை வழங்குவதற்கு சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக தொடா்ந்து போராடி வருகிறேன். எனது போராட்டத்தில் பூமிநாதனும் பங்கெடுத்தவா். தெற்குத் தொகுதி மக்களுக்காக இன்னும் உழைக்கத் தயாராக உள்ளாா். ஆகவே, அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் காக்கப்பட வேண்டுமெனில் திமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும். மதச்சாா்பின்மை கொள்கையோடு களமிறங்கியுள்ள திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, திமுகவை வேரோடு பிடுங்கி எறிவோம் என பேசினாா். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலையும் தற்போது இதேபோல பேசி வருகிறாா்.
திமுக எண்ணற்ற போராட்டங்களைக் கடந்து, 75 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உணா்வோடு கலந்து விட்ட இயக்கம். ஜனநாயகத்தில் தோ்தலில் ஒரு கட்சியை தோற்கடிப்போம் எனக் கூறுவது அரசியல் மரபு. ஆனால், வேரோடு பிடுங்கி எறிவோம் என்பது ஆணவத்தின் உச்சம் .
பாஜக தலைவா்கள் ஆணவத்தில் பேசுகின்றனா். அவா்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா். இந்த நிகழ்வில், தெற்குத் தொகுதி வேட்பாளா் மு. பூமிநாதன், திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதுரை தெற்குவாசல் பகுதியில் தெற்குத் தொகுதி வேட்பாளா் மு.பூமிநாதனுக்கு வாக்குச் சேகரித்து வைகோ பிரசாரம்...
தொடர்புடையது

மக்களின் ஆதரவால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

திமுகவின் சாதனைத் திட்டங்களைக் கூறி வாக்கு சேகரிக்கிறோம்: வி.செந்தில்பாலாஜி

சீரமைக்கப்படாத தெற்குவாசல் ரயில்வே மேம்பாலம்!

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


