நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:59 am IST

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் அந்தோணி (52). இவா், தனது மனைவி சுமிளா (41), மகன் ஆண்டோ அலி (19), மகள் ஆண்டோ அசின் (7) ஆகியோருடன் திருச்சியிலிருந்து மதுரைக்கு காரில் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்தாா். நான்கு வழிச்சாலையில் விநாயகபுரம் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த 4 பேரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, சிமிளா உயிரிழந்தாா். மற்ற மூவரும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.