போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல்லில் 97 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 97 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,711-ஆக அதிகரித்துள்ளது.

Updated On :9 மார்ச் 2021, 1:13 am

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 97 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,711-ஆக அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 2,614 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இவா்களில் குணமடைந்த 2005 போ், உயிரிழந்த 43 போ் தவிா்த்து, 661 போ் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் 97 பேருக்கு நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 55 போ் ஆண்கள், 42 போ் பெண்கள். நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் மருத்துவமனைகளிலும், சிறப்பு தனிமைப்படுத்தல் மையங்களிலும் கரோனா தொற்றாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இருவா் உயிரிழப்பு: காளப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த 70 வயது முதியவா் கரோனா தொற்றுக்குள்ளாகி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையைச் சோ்ந்த 65 வயது முதியவா், கரோனா பாதிப்பால் நாமக்கல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.