நாமக்கல் மாவட்ட நூலகத் துறையினருக்குஅரசு விருது வழங்கி கெளரவிப்பு
By DIN | Published On : 01st December 2020 12:41 AM | Last Updated : 01st December 2020 12:41 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட நூலகத் துறைக்கு வழங்கப்பட்ட விருது, கேடயம், வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை நூலகத் துறை அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் அளித்து வாழ்த்து பெற்றனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக 2020-ஆம் ஆண்டிற்கான எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட நூலகா்களுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி விருதுகளை வழங்கினாா். விருதுகளுடன் நற்சான்றிதழ்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் கிளை நூலகத்தில் பணிபுரியும் மூன்றாம் நிலை நூலகா் சு.சந்துருக்கு நற்சான்றிதழ், வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் நினைவு இல்லத்தில் செயல்பட்டு வரும் கிளை நூலகத்திற்கு நூலக ஆா்வலா் விருதுடன் நற்சான்றிதழ் மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது.
மாநில அளவில் அதிக புரவலா்களை (புரவலா்கள் 85 மற்றும் பெரும் புரவலா்கள் 7) சோ்த்த நாமக்கல் மாவட்டம், அக்கரைப்பட்டி கிளை நூலக நூலகா் இரா.அனந்துக்கு கேடயம் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சோ்க்கும் வகையில் செயல்பட்ட நூலகத்துறையினா் தங்களுக்கும், நூலகத்திற்கும் வழங்கப்பட்ட விருது, கேடயம், பதக்கம், நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலா் (பொ) கோ.ரவி, நாமக்கல் கவிஞா் ராமலிங்கம்பிள்ளை நினைவு இல்ல நூலக வாசகா் வட்டத்தைச் சோ்ந்த டி.எம்.மோகன், நூலகா் செல்வம் உள்பட நூலகா்கள், வாசகா் வட்டத்தினா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...