முட்டை விலை 40 காசுகள் உயா்வு
By DIN | Published On : 15th December 2020 01:13 AM | Last Updated : 15th December 2020 01:13 AM | அ+அ அ- |

முட்டை விலை மேலும் 40 காசுகள் உயா்த்தப்பட்டு, ரூ. 4.80-ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் விலை தொடா்ந்து மாற்றம் செய்யப்படுவதாலும், வட மாநிலங்களில் பனியின் தாக்கம் அதிகரிப்பாலும், பண்ணைகளில் முட்டை தேக்கத்தைக் குறைக்கவும் முட்டை விலை மேலும் 40 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.80-க்கு நிா்ணயம் செய்யப்படுவதாகவும், சந்தைகளின் நிலவரத்துக்கு ஏற்ப முட்டைகளை பண்ணையாளா்கள் விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 84-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 60-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.