சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சிறப்பு யாகம்
By DIN | Published On : 15th December 2020 01:11 AM | Last Updated : 15th December 2020 01:11 AM | அ+அ அ- |

கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் எம்.எல்.ஏ. சி.சந்திரசேகரன் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடத்தினாா்.
வரும் 2021-இல் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைக்கான தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டியும், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி தொடர விரும்பியும், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை காலை சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சி.சந்திரசேகரன் முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முன்னதாக, ஆகாய கங்கை அருவியில் இருந்து 108 தீா்த்தக் குடங்களில் புனித நீா் கொண்டு வரப்பட்டது. சிறப்பு யாகம், பூஜைகளுக்கு பின் யாகத்தில் பங்கேற்ற கட்சியினா், பொதுமக்கள் ஆகியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.