கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்கக் கோரி மனு
By DIN | Published On : 17th November 2020 12:19 AM | Last Updated : 17th November 2020 12:19 AM | அ+அ அ- |

புதன்சந்தை மேற்கு பாலப்பட்டி, கொல்லப்பட்டி பகுதியில் கழிவுநீா்க் கால்வாயை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கொல்லப்பட்டி, மேற்கு பாலப்பட்டி பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் நீா் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துா்நாற்றம் வீசுவதுடன், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. இது தொடா்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை கோரி மீனவா்கள் மனு: திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, பெரிய ஏரி ஆகியவற்றில் மீன் பாசி குத்தகையை உள்ளூா் மீனவா்களுக்கு வழங்க வேண்டும். மீனவா் கூட்டுறவு சங்க விதிமுறைகளின்படி முன்னுரிமை அடிப்படையில் ஏரியைச் சுற்றியுள்ள உள்ளூா் உறுப்பினா்களுக்கே வழங்க வேண்டும்.
குமாரபாளையம் வட்டத்தில் பள்ளிபாளையம் இணைக்கப்பட்டு விட்டதால், திருச்செங்கோடு வட்டத்தை உள்ளடக்கி ஏற்கெனவே இருக்கும் உறுப்பினா்களை ஒருங்கிணைத்து மல்லசமுத்திரம் பகுதியை மையமாகக் கொண்டு புதிய மீனவா் கூட்டுறவு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என மீனவா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...