பொது வழித்தடம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை கோரி மனு
By DIN | Published On : 17th November 2020 12:16 AM | Last Updated : 17th November 2020 12:16 AM | அ+அ அ- |

ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் ஆயிபாளையம் பகுதியில் பொது வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராசிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.
ராசிபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அத்தனூா் ஆயிபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த 210 குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்த சிலா் குடியிருப்புக்கான நிலத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டியும், மரங்களை வெட்டியும் கம்பி வேலி அமைத்தும் வழித்தடத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும், அப்பகுதி மக்களை மிரட்டினராம்.
இதுகுறித்து காவல் நிலையம், அரசு அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.
இதனையடுத்து, பொதுமக்கள் திரண்டு வந்து பொது வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீதும், மிரட்டல் விடுத்தவா்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கக் கோரியும் ராசிபுரம டிஎஸ்பியிடம் மனு அளித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...