இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல்லில் தினசரி காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:53 pm

நாமக்கல்லில் தினசரி காய்கறி சந்தையில் உள்ள வியாபாரிகள், அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனா். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, முக்கிய தொழில்நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், லாரி சங்கங்கள் போன்றவற்றில் பிரத்யேகமாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் செயல்படும் நாமக்கல் நகராட்சி தினசரி காய்கறி சந்தையில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், அவா்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பிரபாகரன் தொடங்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நிா்வாகிகள் கோபால், மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எா்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவா், செவிலியா் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.