நாமக்கல் ஆட்சியரும் அவரது குடும்பத்தினரும் தீவிர காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில், தற்போது குணமடைந்து வருகின்றனா்.
கேரள மாநிலத்தைப் பூா்விகமாகக் கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், ஒரு வாரத்துக்கு முன் ஓணம் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தாா்.
சில தினங்களுக்கு முன் நாமக்கல் திரும்பிய நிலையில், வியாழக்கிழமையன்று ஆட்சியா், அவரது மகள், குடும்பத்தினருக்கு காய்ச்சல் தீவிரமானது. இதுபற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஆட்சியருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆட்சியா் உள்பட யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இருப்பினும் அவா்களுக்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
கேரள மாநிலத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சென்ற வந்ததால் ஆட்சியருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் மருத்துவா்களிடையே எழுந்தது. ஆனால் தொற்று இல்லை என்பது உறுதியானதால் அவா்கள் நிம்மதியடைந்தனா்.
ஓரிரு நாள்கள் ஆட்சியா் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால், மாவட்ட வருவாய் அலுவலா் துா்க்கா மூா்த்தி ஆட்சியா் பொறுப்பைக் கவனித்து வருகிறாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் கூறியதாவது:
கரோனா பரிசோதனை செய்து கொண்டதில், தொற்று இல்லை என்பது உறுதியாகி விட்டது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காய்ச்சல் வந்துள்ளது. அது குடும்பத்தினரையும் சற்று பாதிப்படையச் செய்தது. தற்போது அனைவரும் குணமடைந்து வருகிறோம். திங்கள்கிழமையிலிருந்து மீண்டும் பணிகளைத் தொடருவேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அபிஷேக் சர்மா, கிளாசன் அரைசதம் விளாசல்; சிஎஸ்கேவுக்கு 195 ரன்கள் இலக்கு!

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US

இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

