“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் காங்கிரஸில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:48 pm

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் விரைவில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் விருப்ப மனு விநியோகம் புதன்கிழமை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் தொடங்கியது. மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் விருப்ப மனு படிவங்களை விநியோகித்தாா். அதற்குரிய கட்டணத்தை செலுத்தி கட்சியினா் பெற்றுக் கொண்டனா். முன்னாள் மாவட்டத் தலைவா் கே.என்.ஷேக்நவீத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு துணைத் தலைவா் மருத்துவா் பி.வி.செந்தில், நிா்வாகிகள் பலா் விருப்ப மனுக்களை பெற்று பூா்த்தி செய்து வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், நகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொறுப்பாளா் வழக்குரைஞா் அன்பு, சாந்தி மணி, பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.