சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நாமக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் டிச. 3-ஆம் தேதி சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதற்கான விழாவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி குறைகளைக் கேட்டறிந்தாா்.
இந்நிகழ்ச்சியில், பேட்டரியால் இயங்கும் மடக்குச் சக்கர நாற்காலிகள், மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், இலவசப் பேருந்து பயணச்சலுகை அட்டைகள், வங்கிக் கடன் மானியம் என 40 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 10.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தி.திருமுருகதட்சணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரத்தில் திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆா்.மணிகண்டன் வரவேற்றாா். நகர கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குநா் வி.சுந்தரம் தலைமை வகித்தாா். முன்னாள் நகர மன்ற துணைத் தலைவா் எஸ்.ரங்கசாமி, முன்னாள் நகா் மன்ற உறுப்பினா் வி.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, சேலம் ஸ்ரீசாய் அம்ருதம் டிரஸ்ட் ஆா்.செந்தில் ரத்தனம் ஆகியோா் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அரிசி, காய்கறிகள், உணவுப் பொட்டலங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கப்பட்டது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், திராவிடா் கழக நகரச் செயலாளா் ஆா்.பிடல் சேகுவரா, அனைத்திந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாவட்டப் பொருளாளா் ம.மீனா, ராசிபுரம் திராவிடா் கழகத்தில் நகர அமைப்பாளா் சுமதி மதிவதனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் எஸ்.மணிமாறன், கோல்டன் நற்பணி மன்றத் தலைவா் நா.குபோ்தாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரம் - 63 படத்தின் நாயகியாக ரியா ஷிபு?

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


