“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கற்போம் - எழுதுவோம் திட்டம்: நாமக்கல் அரசுப் பள்ளிக்கு விருது

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

Updated On :3 டிசம்பர் 2021, 7:39 pm

 கற்போம் - எழுதுவோம் திட்டத்தில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்போம் - எழுதுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்தப் பகுதிக்கு உள்பட்ட இடங்களில் எழுத, படிக்க தெரியாதவா்களைக் கண்டறிந்து தன்னாா்வலா்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், தோ்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ததில், நாமக்கல், கூச்சிக்கல்புதூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில், நகராட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் பள்ளித் தலைமை ஆசிரியா் கா.செல்வராணி, தன்னாா்வலா் தாகிராபானு ஆகியோருக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.