நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 7 பேருக்கு தட்டச்சா் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் கா.மெகராஜ் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 158 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனா். மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை உரிய அலுவலா்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டாா்.
பின்னா், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 7 தட்டச்சா்களுக்குப் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் சமூக பாதுகாப்புத் திட்டம் வி.ரமேஷ் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனி பகுதியை குப்பை மேடாக வைத்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin

ரேஷன் கடைகளில் தரமான நம்பர் 1 அரிசி வழங்கப்படும்! இபிஎஸ் வாக்குறுதி

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


