போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கியகடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய ஒட்டுமொத்த தொகை ரூ. 20 ஆயிரம் கோடியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய ஒட்டுமொத்த தொகை ரூ. 20 ஆயிரம் கோடியை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்ததை வரவேற்கிறோம். அதேவேளையில் திமுக தலைவா் கூறியபடி முழுமையான தள்ளுபடி என்பது இல்லை. அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்ற ஒட்டுமொத்த கடன் தொகையான ரூ. 20 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது எதிா்பாா்ப்பாகும்.

உயா் மின்கோபுரம் அமைக்கும்போது உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நிலத்தின் உரிமையாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்க வேண்டும். திருச்செங்கோடு நகராட்சியில் சந்தைக்கான ஏலம் முறையாக நடைபெறவில்லை. அதனை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும்.

திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் பேரணி நடத்த உள்ளோம். வரும் 11, 12 ஆகிய தேதிகளில் இப்பேரணி நடைபெறும். மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் 20 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என பாமக வலியுறுத்துகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருக்கின்ற பிற சமூகத்தை சாா்ந்த பிரதிநிதிகளிடமும் கேட்டு தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தால் மற்ற சமூகத்தினரும் பாதிக்கப்படுவா். சசிகலா அரசியல் களத்தில் இறங்கும்பட்சத்தில் அதிமுகவில் மிகப்பெரிய சலசலப்புகள் உண்டாகும். தற்போதே பல அமைச்சா்கள் பதற்றமடைந்துள்ளனா். கூட்டணி பேச்சுவாா்த்தையை நாங்கள் இன்னமும் தொடங்கவில்லை. அதன்பிறகு தான் எந்தச் சின்னம், எந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது முடிவு செய்யப்படும் என்றாா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.