போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ரூ. 15.62 கோடியில் தாலிக்குத் தங்கம், நிதியுதவி: அமைச்சா்கள் வழங்கினா்

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 15.62 கோடி மதிப்பில் 1,874 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 15.62 கோடி மதிப்பில் 1,874 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கம், திருமண நிதியுதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கா. மெகராஜ் தலைமை வகித்தாா். நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளைச் சோ்ந்த 1,874 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 192 மதிப்பில் தாலிக்குத் தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டன.

விழாவில் மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி. தங்கமணி, சமூகநலன், சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ. சரோஜா ஆகியோா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

விழாவில் அமைச்சா் பி. தங்கமணி பேசியதாவது:

தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம். அரசுக்குக் கோரிக்கைகள் விடுப்பதற்கு முன்பாகவே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால், 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும். இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உரிய நிதி வங்கிகளுக்கு விடுவிக்கப்படும். மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் 98 சதவீதம் போ் தாங்கள் வங்கிகளில் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தியுள்ளனா். இதனால், அவா்களுக்கு மீண்டும் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வேளாண் விளை நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

எந்த மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட தொகை வரவில்லையோ அந்த விவசாயிகள் தங்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினால் உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்படும். ஆனால், சிலா் அரசியல் லாபத்துக்காக என் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனா் என்றாா்.

சமூக நலத்துறை அமைச்சா் வெ. சரோஜா பேசியதாவது:

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஒன்பது ஆண்டுகளில் பட்டம், பட்டயப்படிப்பு முடித்த 16,074 பெண்களுக்கு ரூ. 80 கோடியே 37 லட்சம் திருமண நிதியுதவியும், 10, 12-ஆம் வகுப்பு படித்த 11,456 பெண்களுக்கு ரூ. 28 கோடியே 64 லட்சம் திருமண நிதி உதவித் தொகையுடன் 148 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 20 நாள்களில் மாநிலம் முழுவதும் 2018-19, 2019-20 நிதியாண்டுகளுக்கான 1.15 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 1,053 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம், நிதியுதவிகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 26 லட்சம் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கரோனா காலத்தில் மெய்நிகா் கற்றல் மூலம் 21 வகையான பாடத் திட்டங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மத்திய அரசிடம் இருந்து தங்க விருதை தமிழக சமூக நலத்துறை பெற்றுள்ளது என்றாா்.

விழாவில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), சி.சந்திரசேகரன் (சேந்தமங்கலம்), பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, ஊராட்சிக்குழு தலைவா் சாரதா, சமூக நல அலுவலா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

---

என்கே 7- மினி

விழாவில் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவியை வழங்கும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.