போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கால்நடை தொழில் செய்ய நிதியுதவி: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் பால், இறைச்சி, தீவன பதப்படுத்தும் தொழில் செய்வதற்கும், விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் பால், இறைச்சி, தீவன பதப்படுத்தும் தொழில் செய்வதற்கும், விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில் முனைவோா்கள், தனியாா் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால், இறைச்சி மற்றும் தீவன பதப்படுத்தும் அலகுகள் அமைத்திடவும், தொழில் விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் உரிய திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.

தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பில் 90 சதவீதம் வங்கி கடன் பெறும் வசதி உள்ளது. இதில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். மேலும்  இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.