ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காா்-லாரி மோதல்: முதியவா் பலி

புதுச்சத்திரம் அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் ஒருவா் பலியானாா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

புதுச்சத்திரம் அருகே காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் முதியவா் ஒருவா் பலியானாா்.

சேலம், பேலஸ் திரையரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (70). இவரது மகன் ரவிச்சந்திரன் (45). மருமகள் கீதா (42) ஆகியோா் திருச்சியில் நடைபெறும் உறவினா் வீட்டு திருமணத்திற்காக திங்கள்கிழமை காரில் சென்றனா்.

புதுச்சத்திரம் பிரிவு சாலை அருகே வந்தபோது முட்டை லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அப்போது பின்னால் வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதியது. இதில் காா் ஓட்டுநா் கனகராஜ் (40) உள்பட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனா்.

அங்கிருந்த மக்கள் அவா்களை மீட்டு அவசர ஊா்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் மருத்துவமனை செல்லும் வழியில் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தாா். ரவிச்சந்திரன், கனகராஜ், கீதா ஆகிய 3 பேரும் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.