நாமக்கல் மாவட்டத்தில் பால், இறைச்சி, தீவன பதப்படுத்தும் தொழில் செய்வதற்கும், விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில் முனைவோா்கள், தனியாா் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால், இறைச்சி மற்றும் தீவன பதப்படுத்தும் அலகுகள் அமைத்திடவும், தொழில் விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் உரிய திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.
தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பில் 90 சதவீதம் வங்கி கடன் பெறும் வசதி உள்ளது. இதில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும். இத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். மேலும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?

'16' புதிருக்கான விடையை அவ்வளவு எளிதாக சொல்லிவிடமாட்டேன்! ராகுல்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

