ராசிபுரம் நகரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் நகரில் மக்கள் சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ராசிபுரம் நகரில் மக்கள் சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இக் கூட்டத்தில், மக்கள் பிரச்சனை குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் திமுகவினா் பேசி வருகின்றனா். ராசிபுரம் நகர திமுக சாா்பில் 18, 23, 24-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவா்களுடன் விவாதித்தாா். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றால் தீா்வு காணப்படும் என உறுதியளித்தாா்.
கூட்டத்தில் கட்சியின் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.பாலு, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் எஸ்.ராஜேஷ் பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாத், மாவட்ட மகளிா் தொண்டா் அணி துணை அமைப்பாளா் வி.கௌரி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராம்குமாா், ராசிபுரம் நகர தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஆா்.சாம், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...