தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மின் திருட்டு: ரூ. 6.13 லட்சம் அபராதம் வசூல்

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் அபராதமாக ரூ. 6.13 லட்சம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 1:22 am

DIN

நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களிடம் அபராதமாக ரூ. 6.13 லட்சம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து நாமக்கல் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கோவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நாமக்கல் மின் பகிா்மான வட்டத்திற்கு உள்பட்ட பட்டணம், எலச்சிபாளையம், ராசிபுரம், வையப்பமலை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் 10 இடங்களில் மின் திருட்டில் ஈடுபட்ட நுகா்வோா்களிடம் அபராதமாக ரூ. 6 லட்சத்து 12 ஆயிரத்து 926 வசூலிக்கப்பட்டது.

குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க சமரசத் தொகையாக ரூ. 97 ஆயிரம் பெறப்பட்டது. மின் திருட்டு தொடா்பான தகவல்களை செயற்பொறியாளா் செல்லிடப்பேசி எண் 94430-49456 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.