ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தாட்கோ கடனை தடையின்றி வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:30 pm

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை எஸ்.சி., எஸ்.டி. ஊழியா்கள் கூட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் சரஸ்ராம்ரவி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். நில அளவைத் துறை சங்க மாநிலச் செயலாளா் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். விழிப்புணா்வு இயக்க மாநில துணைச் செயலா் கோ.முருகேசன் முன்னிலை வகித்தாா்.

இதில், பட்டியலின மக்களின் தாட்கோ கடன் விண்ணப்பங்களை கிடப்பில் போடும் நாமக்கல் மாவட்ட அனைத்து வங்கி மேலாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து வங்கிக் கடன்களை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு துறை சாா்ந்த ஊழியா்கள், பட்டியலின மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.