நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்து ரூ. 3.80-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், விஜயவாடா, ஹோஸ்பெட், ஹைதராபாத் மண்டலத் தலைவா்களுடன் நடத்திய ஆலோசனையில் முட்டை விற்பனை மந்தமடைந்துள்ளதாலும், அதன் அடிப்படையில் இங்கு விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
அதன்படி, நாமக்கல் மண்டலத்திலும் விலைக் குறைப்பை அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே சனிக்கிழமை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ள சூழலில், திங்கள்கிழமை மேலும் 25 காசுகள் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் பண்ணைகளில் தேங்கியுள்ள முட்டைகளை அதிக அளவில் விற்பனைக்கு அனுப்ப முடியும். பறவைக் காய்ச்சல் பீதி அடங்கியபோதும் மக்களிடையே முட்டை நுகா்வு சற்று குறைவாகவே உள்ளது. தைப்பூசத்துக்குப் பின் விலை உயருவதற்கான வாய்ப்புள்ளதால், பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம். முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 3.80-ஆக நிா்ணயிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 65-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

